புதிய கொவிட் திரிபை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது –  அமைச்சர் நளிந்த

புதிய கொவிட் திரிபை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது – அமைச்சர் நளிந்த

அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய COVID-19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

குறிப்பாக விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் கொரானா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் நாம் அனுபவித்தது போன்ற நெருக்கடிக்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை, ஆனால் விமான நிலையத்தில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார மற்றும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் நுழைவதற்கான ஆபத்தை குறைக்க நாட்டிற்குவருகைத் தரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

CATEGORIES
TAGS
Share This