இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி கைவிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மகளிர் அணி இரண்டாவது போட்டியில் இன்று அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருந்தது.

முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதேவேளை அவுஸ்திரேலிய அணி அதன் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை வெற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share This