விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று

விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று

விசேட நாடாளுமன்ற அமர்வு நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று திங்கட்கிழமை காலை 9.30 க்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 11 இன் படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி மூலோபாய அறிக்கையை அறிவிக்க வேண்டும் என்ற தேவையை நிறைவேற்றுவதற்காக, நாடாளுமன்றம் இந்த முறையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் வேண்டுகோளின் பேரில் சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டியுள்ளார்.

இது தொடர்பான அரசாங்கத்தின் ஒத்திவைப்பு விவாதம் இன்று மாலை 4.30 வரை நடைபெற உள்ளது.

மேலும், ஜூலை 8, 9 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This