இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட விசாரணைப் பிரிவு

இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை விரைவுபடுத்துதல், முறைப்பாடுகளுக்கு செயற்றிறனுடன் தீர்வு வழங்குதல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல் என்பன புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதற்கான நோக்கங்கள் என தெரிவிக்கப்படுகிறது.