தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.
கரூர் சம்பவத்திற்கு பின்னர் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த பொதுக் குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு தரப்பினர்களும், விஜய் மீதும் அவரின் கட்சியின் மீதும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபா நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்த விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கரூர் சம்பவத்திற்கு பின்னர் அரசில் செயற்பாடுகளுக்கு விஜயம் முழுக்குப் போட்டிருந்த நிலையில், தற்போது தீவிரம் காட்டியுள்ளார்.
இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
