ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகள்

ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகள்

ரயில் பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகளை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

ரயில்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் பணியாளர்களிடமிருந்து உதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

தேவையுடையோர் 1971 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This