மகிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

மகிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி இவர்களுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்று (28) நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் ஒரு புதிய அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இந்தப் புதிய அலுவலகத்திலிருந்தே அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

மேலும், அலுவலக திறப்பு விழா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This