
மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நியாயமற்ற வட்டி விகிதங்களை அறவிட்டால், நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், வங்கிகளால் அறவிடப்படும் வட்டி விகிதங்கள் குறித்து வங்கிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், வட்டி விகிதங்கள் நியாயமற்ற முறையில் அறவிடப்பட்டால், அது குறித்த முரண்பாடுகளை விசாரணை செய்ய அதிகாரம் இருப்பதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், அத்தகைய முறைப்பாடுகளை நுகர்வோர் பாதுகாப்புத் திணைக்களத்தின் துரித இலக்கமான 19 35 க்கு அறிவிக்க முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
