தாயை கொலை செய்த மகன் தற்கொலை

தாயை கொலை செய்த மகன் தற்கொலை

தனது தாயை கொலை செய்த மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொடகவெல பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாயை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்ற மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொடகவெல, பிசோகொட்டுவ பிரதேசத்தில் 82 வயதுடைய பெண் ஒருவர் அவரது மகனால் நேற்று ஞாயிறுக்கிழமை (15) அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பின்னர், அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றதுடன், உடவலவ பிரதேசத்தில் குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கல்பாய, பல்லேபெத்த பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This