செம்மணியில் இன்றும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

செம்மணியில் இன்றும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்றும் சில எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

அதில் ஆடைகளுடன் கூடிய சிறுமி ஒருவரின் எலும்புக்கூடும் இன்று அடையாளம் காணப்பட்டதாக, பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இன்று ஏழு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கமைய, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 63 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 54 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.

 

Share This