வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஆறு அதிகாரிகள் இடைநீக்கம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக ஆறு அதிகாரிகள் இடைநீக்கம்

பயிற்சி பெறாத பெண்களை வெளிநாட்டு வேலைகளுக்காக அனுப்பியதில் இடம்பெற்றதாக கூறப்படும் 2.5 பில்லியன் மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூடுதல் பொது மேலாளர் உட்பட ஆறு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2022 மற்றும் ஓகஸ்ட் 2024 க்கு இடையில், சுமார் 35,000 பெண்கள், பணிகளுக்கு புறப்படுவதற்கு முன் கட்டாயமாக்கப்பட்டுள்ள பயிற்சியை முடிக்காமல் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தலா 100,000 ரூபா முதல் 140,000 ரூபா வரை வசூலிக்கப்பட்டதாகவும், முன் அனுபவத்தை பொய்யாக சான்றளிக்க போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டதுடன் கோப் குழுவிலும் விவாதிக்கப்பட்டது. இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This