உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 02 குழந்தைகள் உட்பட சுமார் அறுவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மாஸ்கோ அதன் தொடர்ச்சியான போருக்கு போதுமான அழுத்தத்தை எதிர்கொள்ளவில்லை என்பதை இந்த தாக்குதல் நிரூபித்ததாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யாவின் விளாடிமிர் புடினுடன் புடாபெஸ்டில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டிற்கான தனது திட்டங்கள், பயனற்ற சந்திப்பை விரும்பவில்லை என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

தற்போதைய முன்னணி வரிசையில் போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளை கிரெம்ளின் நிராகரித்துள்ளது.

Share This