வத்தளையில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொளுடன் அறுவர் கைது

வத்தளை, பள்ளியவத்தையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா சுமார் 39 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி பிரதேச பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்க, களனி மாவட்ட பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வத்தளை தலைமை பொலிஸ் பரிசோதகர் அனுர குணவர்தன மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்க உள்ளிட்ட குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
