பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

பாணந்துறை, அலுபோமுல்ல, சந்தகலவத்த பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விற்பனை நிலையம் ஒன்றின் மீது இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத இருவர் N99 துப்பாக்கியை பிரயோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

எனினும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்றபோது விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் இருந்தபோதிலும்,
துப்பாக்கி குண்டுகள் குளிர்சாதனப் பெட்டியை நோக்கி பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அலுபோமுல்ல பொலிஸார் மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share This