ஹிக்கடுவையில் துப்பாக்கிப் பிரயோகம் – சந்தேகநபர் ஒருவர் கைது

ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் அடையாளந் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் காரொன்றில் சென்ற ஐவரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது காயமடைந்த ஒருவர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிப் பிரயோகத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும்
பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட துப்பாக்கிதாரி இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
