Update – அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Update – அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

………………………………………………………………………………………………………………….

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வௌ்ளை நிற கார் ஒன்றில் வருகை தந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிசிக்சைப் பெற்று வருகிறார்.

அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் உறவினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Share This