நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அறக்கட்டளைக்கு கிடைத்த சில மானியங்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் மூலம் செய்யப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து அவரிடம் குறிப்பாக விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 27 ஆம் திகதி இந்த விசாரணைகள் தொடர்பாக முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனிப்பட்ட காரணங்களால் தான் முன்னிலையாக முடியவில்லை என்று அவர தெரிவித்திருந்தார்.

அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ச கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, இன்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )