நாட்டில் ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நாட்டில் ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் தொடர்பில் நடந்ததாகவும், மற்றையது பலவந்தமாக நடந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலவந்தமாக செய்யப்பட்ட குற்றத்தில் சந்தேகநபர் தாயின் சட்டபூர்வமற்ற கணவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அனைத்து சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் 12,14 மற்றும் 15 ஆகிய வயதுகளில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள போதும், சிலர் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகே பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த 06 சம்பவங்கள் ஆனமடுவ, தெபுவன, கம்பளை, பயாகல மற்றும் தமன பொலிஸ் நிலைய பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

ஒவ்வொரு ​பொலிஸ் பிரிவிலிருந்தும் தினமும் பல சம்பவங்கள் பதிவாகி வருவதால், தங்களின் மகள்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்ளுமாறு பொலிஸார், பெற்றோர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Share This