தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம்

தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம்

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

கார் ஒன்றும் ஆறு முச்சக்கர வண்டிகளும் தீ பரவலில் சேதமடைந்துள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அவசர தொலைபேசி எண் 119 க்கு வந்த அழைப்பினைத் தொடர்ந்து தெமட்டகொடை பொலிஸார் கிராண்ட்பாஸ் தீயணைப்பு படையினருடன் இணைந்து செயற்பட்டனர்.

தீயை அணைப்பதில் குடியிருப்பாளர்களும் உதவியுள்ளனர். இதனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 300 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This