
டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் – மூத்த அரசியல்வாதிகள் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் டிரம்பை மனநிலை பிறழ்ந்தவர் என்று விமர்சித்ததுள்ளார்.
அத்துடன், இருபத்தைந்தாவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
டிரம்ப் மனரீதியாக நிலையற்றவராகவும் ஆபத்தானவராகவும் மாறிவிட்டார் என்றும், காங்கிரஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கூறியுள்ளார்.
அனைவரும் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், டிரம்ப் ஒரு மனநிலை பிறழ்ந்த பைத்தியக்காரனைப் போல சமூக ஊடகங்களில் உளறிக்கொண்டிருக்கிறார் என்று செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் முன்னாள் ஆதரவாளரான டெய்லர் கிரீன், டிரம்புக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தில் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று கருதுபவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் இந்தப் பைத்தியக்காரத்தனத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்ஃபி, தான் டிரம்பின் அமைச்சரவையில் இருந்திருந்தால், அமெரிக்க அரசியலமைப்பின் இருபத்தைந்தாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவ்து குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இருபத்தைந்தாவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, ஜனாதிபதிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவையின் பெரும்பான்மை முடிவின் மூலம் துணை ஜனாதிபதி அவரது அதிகாரங்களை ஏற்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
