போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு

பாகிஸ்தான் – இந்தியா போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளதுடன் டெல்லியில் உள்ள அவரது வீட்டைச் சுற்றி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் அவர் பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடம் கலந்துரையாடி வருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில், ஜெய்சங்கருக்கான பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 22 ஆம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம்,பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.

பாகிஸ்தானில் உள்ள 09 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை, ட்ரோன், குண்டு வீச்சு, எல்லையில் துப்பாக்கிச் சூடு என பதில் தாக்குதல் மேற்கொண்டது.

தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This