மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி கைது

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி கைது

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதி ஒருவர் குருநாகல், கட்டுப்பொத்த பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுப்பொத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பஸ் ஒன்றை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சோதனையிட்ட போது சாரதி மது அருந்தியிருந்தமை தெரியவந்ததாக
பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பஸ்ஸில் 16 பாடசாலை மாணவர்களும், 02 பெற்றோர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதி கட்டுப்பொத்த பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (20) நாரம்மல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This