சஷீந்திர ராஜபக்ஷவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் திங்கட்கிழமை (22) வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கு அடுத்த திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவும் அன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளது.