சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே

சஞ்சு சாம்சான் உள்ளே, ஜடேஜா வெளியே!! பாரிய பரிமாற்றத்திற்கு தயாராகும் சிஎஸ்கே

ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பான வீரர்கள் பரிமாற்றம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் தலைவர் சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, சஞ்சு சாம்சான் சென்னை அணிக்கு வரும் நிலையில், சென்னை அணியின் தூணாக விளங்கிய ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்லவுள்ளார்.

ஜடேஜாவுடன் சென்னை அணியில் இருந்து சாம் கரனும் ராஜஸ்தானி அணிக்கு பரிமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மூன்று வீரர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீரர்களின் பரிமாற்றத்திற்கான விருப்பம் தற்போது இந்திய கிரிக்கெட் சபைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடுத்த 48 மணி நேரத்தில் இறுதி ஒப்புதலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சஞ்சு சாம்சன், ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகிய மூவரும் இந்த பரிமாற்றத்திற்கு இணக்கம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சஞ்சு சாம்சன் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே தங்கள் அணிகளில் தலா 18 கோடி ரூபாவிற்கு தக்கவைக்கப்பட்ட (Retained) வீரர்கள் ஆவர்.

இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் சென்னை அணிக்கு ‘Gun Player’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Share This