‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தை வரவேற்கும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார

‘கிளீன் ஸ்ரீலங்கா’  திட்டத்தை வரவேற்கும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார

இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் அரசாங்கத்தின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை வரவேற்றுள்ளனர்.

தூய்மை மற்றும் நிலையான நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை (01.01.2025) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹேல ஜயவர்தன, இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

“குடிமக்கள் என்ற வகையில், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இது ஒரு சிறந்த தொடக்கமாகும், மேலும் இதனை முன்னெடுத்துச் செல்ல நிறைய பொறுப்பு இருக்கிறது” என்றார்.

இதேவேளை,சமூக விழுமியங்களில் கலாச்சார மாற்றத்தை ஊக்குவிக்கும் அதேவேளை அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு சரியான முயற்சியென ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை சங்கக்காரா எடுத்துரைத்தார்.

Share This