சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை
தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு
வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு உத்தரவிட்டார்.
அண்மையில் மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து சந்தேகநபரான சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.
பின்னர் சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைவார் என அவரது சட்டத்தரணி கடந்த 15 ஆம் திகதி அறிவித்திருந்தார்.