மூன்று நாள் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா

உக்ரைனில் 72 மணி நேர ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு வரை ரஷ்யப் படைகள்
தாக்குதல்களை நிறுத்தும் என இன்று திங்கள்கிழமை பிற்பகல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இடைநிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உக்ரைனை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
மோதலில் முழுமையான போர் நிறுத்தத்திற்கு மாஸ்கோ ஒப்புக்கொள்ள அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் அதிகரித்து
வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உக்ரேனிய தரப்பால் மீறல்கள் ஏற்பட்டால் ரஷ்ய ஆயுதப் படைகள் பதிலடி கொடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை பதிலளிக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.