ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று
செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 91 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 304 ரூபா 29 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.