கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,605 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமை கடந்த வருடத்தை 171 விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக ரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய இந்த வருடம் 1,700 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தை விட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளது.
தூக்கம் மற்றும் சோர்வுடன் வாகனத்தை செலுத்தியமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட கவனக்குறைவால் பல விபத்துக்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.