மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகளை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகளை நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

முப்பது சதவீத மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு முன்னணி சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளுக்கமைய, மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நேரத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், அவர்கள் சிரமத்திற்குள்ளாக நேரிடும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Share This