சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை

சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை

சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலன்னறுவையில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் சம்பா மற்றும் கீரி சம்பாவை அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையில் விற்பனை செய்ய முடியாது என்றும் அவர் இதன்போது கூறினார்.

 

 

 

Share This