
புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்
புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (12) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
களனியில் சந்தேகநபர் நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
