
இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஷார செவ்வந்திக்கு உதவியமை மற்றும் அவருக்கு தங்குமிடம் வழங்கியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நந்த குமார் தக்ஷி மற்றும் பரிதொரு நபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள், இன்று கொழும்பு குற்றப்பிரிவு (CCD) அதிகாரிகளால் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கு விவரங்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபர்கள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி திட்டமிடப்பட்ட அடுத்த விசாரணை வரை காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
