பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் தெமட்டகொடையைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் பயணித்த பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். எனினும், அவர் பொலிஸாரின் உத்தரவை மீறி தனது காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.

இதனையடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இந்நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This