ரஞ்சித் அலுவிஹாரே பதவி விலகல்

ரஞ்சித் அலுவிஹாரே பதவி விலகல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹாரே, மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக விஜேரத்ன ஆகியோரும் தங்கள் பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியும், பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை நேற்று (23) காலை, கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம்  அவர் கையளித்தார்.

 

Share This