இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறினார்

சுமார் 03 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

முன்னதாக இரண்டு முறை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குமுன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும்
புத்தாண்டு விடுமுறை மற்றும் அவரது சட்டத்தரணி வெளிநாட்டில் இருந்தமையை காரணம் காட்டி அவர் முன்னிலையாகவில்லை.

 

CATEGORIES
TAGS
Share This