ரணில் விக்ரமசிங்க நாளை இந்தியாவுக்கு விஜயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்த விழாவில் ரணில் விக்ரமசிங்க முக்கிய உரையாற்றுவார் என அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.