ரணிலால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ராஜித சேனாரத்ன

ரணிலால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் – ராஜித சேனாரத்ன

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர், புதிய அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள் நடந்த சம்பவங்களால் வருத்தமடைந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் தோல்வியடைந்துவிட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் அங்கீகரிப்பதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

Share This