குற்றப் புலனாய்வு பிரிவில் ரணில் முன்னிலையானார்

குற்றப் புலனாய்வு பிரிவில் ரணில் முன்னிலையானார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வு பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் முன்னிலையாகியுள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக CID வட்டாரங்கள் தெரிவித்தன.

CATEGORIES
TAGS
Share This