ரணில், சஜித் இணையும் சாத்தியம்!

ரணில், சஜித் இணையும் சாத்தியம்!

புதியதொரு பயணத்திற்காக எதிர்க்கட்சி தரைலவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி ஆகியவை இணைய வேண்டும் என குறித்த கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தில், 15 உறுப்பினர்களில் 14 பேர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் குழுவினர் அண்மையில் மல்வத்த தேரரை சந்தித்தபோது, ​​இந்த இரண்டு கட்சிகளும் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று கூறியதாக அறியப்படுகிறது.

தற்போது இருப்பதைப் போல் பிரிந்து செயல்பட்டால் எந்த ஒரு தரப்பினருக்கும் வெற்றியடைய முடியாது என நிர்வாகக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வெளியப்படுத்தியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியிலேயே இந்த இரு குழுவினரும் இணைய வேண்டும் என உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர்.

Share This