ரம்பொட பஸ் விபத்து – மேலும் பலர் கவலைக்கிடம்

ரம்பொட பஸ் விபத்து –  மேலும் பலர் கவலைக்கிடம்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், ரம்பொட – கெரண்டி எல்ல பகுதியில் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்
காயமடைந்தவர்கள் பலரின்  நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான
பஸ் ஒன்று நேற்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளானதில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொத்மலை பிராந்திய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயார்களும்
வீடு திரும்பியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது ஐந்து நோயாளர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதேவேளை 22 நோயாளர்கள்
கம்பளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நுவரெலியா வைத்தியசாலையில் 15 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளிலும் காயமடைந்த சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கதிர்காமம் டிப்போவின் மேலாளர் துசித சமிந்த, விபத்து குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

“இந்த பஸ் முறையாக கட்டமைக்கப்பட்டுள்ளது, மேலும் நீண்ட தூர சேவை பஸ்கள் இயக்கப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த சாரதி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் சரியாக மாலை 04 மணிக்கு சேவைக்காக சமூகமளித்து இரவு 10 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்குகிறார். அவர் பகலில் இயக்குவதில்லை” என்றார்.

 

Share This