ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு?

ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு?

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் உடனடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலாக உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு பிரச்சினைகள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This