வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் ரயில் மார்க்கம்

களனிவெளி ரயில் பாதையில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 09 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை பகுதியளவு மூடப்படும் எனவும் அதே நாளில் இரவு 08 மணி முதல் 18 ஆம் திகதி காலை 05 மணி வரை முழுமையாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.