ரயில்வே திணைக்களத்தின் முக்கிய பணி 70 வீதத்தால் தோல்வி
இலங்கை ரயில்வே திணைக்களமானது 2023ஆம் ஆண்டில் திட்டமிட்ட 1,22,426 ரயில் பயணங்களில் 36,771 ரயில் பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.
அதன்படி, 85,655 ரயில் பயணங்கள் தாமதமாக அல்லது இரத்து செய்யபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தொடர்பான 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,571 ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 70 வீதமான ரயில் பயணங்கள் சரியான நேரத்திற்கு பயணிக்கவில்லை எனவும் தணிக்கை அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 1,13,759 ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அதில் 36,053 ரயில் பயணங்கள் மாத்திரமே நியமிக்கப்பட்ட குறித்த நேரத்தில் பயணித்துள்ளன.
அதன்படி, 30 வீதமான ரயில் பயணங்கள் மாத்திரமே சரியான நேரத்தில் பயணித்துள்ளன.
2018 ஆம் ஆண்டின் தேசிய தணிக்கைச் சட்டம் எண் 19 மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் படி, 2023.12.31 வரையிலான நடவடிக்கைகள் குறித்து தேசிய தணிக்கைத் தலைமைச் செயலகத்தால் நடத்தப்பட்ட தணிக்கை நிதிநிலை அறிக்கையில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.