2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் அடங்கிய அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அடுத்த ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும்.
அத்துடன் 2026 ஆம் ஆண்டின் உயர் தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறும்.
இதேவேளை அடுத்த ஆண்டின் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறும்.
