தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு மாத்திரம் பாடசாலை பொருட்கள் வழங்குவது நியாயமற்றது – பெற்றோர்கள் விசனம்
புதிய கல்வி ஆண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தங்கள் பிள்ளைகளுக்கான பாடசாலைப் பொருட்களின் விலை அதிகமாகவுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு 6,000 ரூபா பாடசாலை உபகரண கொடுப்பனவுகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதற்கமைய ஏற்கனவே சில பிள்ளைகள் பாடசாலை உபகரண கொடுப்பனவாக 6,000 ரூபாவைப் பெற்றுள்ளதாக சில பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கு மாத்திரம் பாடசாலை உபகரண கொடுப்பனவு வழங்குவது நியாயமற்றது என சில பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதேவேளை, அனைவரும் நியாயமாக வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.