அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி நுவரெலியாவில் போராட்டம்

அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி நுவரெலியாவில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி நுவரெலியாவில் இன்று புதன்கிழமை
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தின் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஒன்றினால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள் இல்லாத பெருந்தோட்ட மக்களுக்கு தற்போதைய அரசாங்கம் நீதி வழங்க வேண்டுமென,போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

Share This