தனியார் பஸ் சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினூடாக பொலிஸாரின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் பஸ் சங்கங்களினால் முன்னெடுக்கப்படவிருந்த நாடளாவிய ரீதியிலான பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் இன்று புதன்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து,
தனியார் பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கு தனியார் பஸ் சங்கங்களுக்கு 03 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
‘கிளீன் ஸ்ரீலங்கா’ பொலிஸ் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு எதிராக தனியார் பஸ் சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தன, அதன் கீழ் அபராதம் விதிக்கப்பட்டதுடன், முறையற்ற வகையிலான அலங்காரங்களை நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் இந்த வேலைத திட்டத்தின் கீழ் இலங்கை பொலிஸார் போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.