தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள அனுமதி

தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்ள அனுமதி

தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை உட்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

அவர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை கருத்திற் கொண்டு தேசபந்து, சிறைச்சாலைக்குள்
பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் செய்தித் தொடர்பாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து பல்லேகலையில் உள்ள தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Share This