பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர் 

பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர் 

பெண்களின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை முன்னேற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் பீஜிங்கில் இன்று நடைபெற்ற பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

1995 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பெண்கள் மாநாட்டிலிருந்து இதுவரை பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், பெண் பணியாளர் பங்கேற்பு 48.7 சதவீதமாக மட்டுமே காணப்படுகின்றமை உள்ளிட்ட முக்கிய குறைபாடுகள் தற்போதும் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பெண் கல்வியறிவு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பட்டம் பெற்றவர்களில், பெண்கள் சுமார் 35 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண்களின் அனைத்துத் துறையிலான மேம்பாடு என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் பரவியுள்ள ஒரு முழுமையான செயன்முறை என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதற்கு  தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே உலகில் எந்தவொரு நாடும் பாலின சமத்துவத்தை முழுமையாக அடையவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

Share This